கேப்டனாக பும்ரா சிறப்பாக செயல்படுவார் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்


கேப்டனாக பும்ரா சிறப்பாக செயல்படுவார் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 22 Dec 2024 9:15 AM IST (Updated: 22 Dec 2024 9:15 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் தற்போது வரை 3 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. 3வது ஆட்டம் டிராவில் முடிந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி வரும் 26ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியாவின் கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ரா செயல்பட்டார். அவரது செயல்பாடு பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், பும்ரா குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, கேப்டனாக பும்ரா சிறப்பாக செயல்படுவார். பெர்த் டெஸ்ட் போட்டியில் அவர் தன்னைத்தானே சரியாக பயன்படுத்தி கொண்டார். கேப்டன்ஷிப்பை பொறுத்த வரையில் சரியான இடத்தில் பீல்டர்களை நிறுத்தினார்.

வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக இருப்பது கடினம். ஏனெனில் பந்து வீசிய பிறகு அவர்கள் பைன் லெக் திசைக்கு சென்று தான் இளைப்பாற முடியும். ஆனால் கேப்டனாக இருந்தால் அதை செய்ய முடியாது. மிட் ஆன் திசையில் இருந்து பீல்டிங்கையும் சரி செய்ய வேண்டும். இருப்பினும் அதனை நேர்த்தியாக செய்தார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story