பாக்சிங் டே டெஸ்ட்: பும்ரா படைக்க வாய்ப்புள்ள 2 மாபெரும் சாதனைகள்


பாக்சிங் டே டெஸ்ட்: பும்ரா படைக்க வாய்ப்புள்ள 2 மாபெரும் சாதனைகள்
x

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற உள்ளது.

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது வரை 3 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. 3வது ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி வரும் 26ம் தேதி 'பாக்சிங் டே டெஸ்ட்' போட்டியாக மெல்போர்னில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா 2 மாபெரும் சாதனைகள் படைக்க வாய்ப்புள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

1. இந்த தொடரில் இதுவரை பும்ரா 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் எஞ்சியுள்ள 2 போட்டிகளில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைப்பார். இதற்கு முன்னர் கபில் தேவ் ஆஸ்திரேலிய ஒரு தொடரில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அந்த சாதனையை தற்போது பும்ரா முறியடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

2. மேலும் இந்திய அணிக்காக இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 194 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வேளையில் மேலும் அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 200 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய 2-வது வீரர் என்ற சாதனையை படைப்பார். இந்த பட்டியலில் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story