பார்டர்-கவாஸ்கர் டிராபி; விராட் இன்னும் 2 சதங்கள் அடிப்பார் - முன்னாள் வீரர் நம்பிக்கை


பார்டர்-கவாஸ்கர் டிராபி; விராட் இன்னும் 2 சதங்கள் அடிப்பார் - முன்னாள் வீரர் நம்பிக்கை
x

கோப்புப்படம்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் தற்போது வரை 3 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. 3வது ஆட்டம் டிராவில் முடிந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி வரும் 26ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் தடுமாறி வருகின்றனர். விராட் கோலி முதல் ஆட்டத்தில் மட்டும் சதம் அடித்து அசத்தினார்.

அதன் பின்னர் அவரது பேட்டிங் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், இந்த தொடரில் விராட் கோலி இன்னும் 2 சதங்கள் அடிப்பார் என இந்திய முன்னாள் வீரர் சேத்தன் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

விராட் கோலி இந்திய அணிக்காக நிறைய சாதனைகளை படைத்துள்ளார். அவரது சாதனைகள் அவர் மீதான நமது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அவர் நன்றாக விளையாடுவார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் இரண்டு சதங்கள் அடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி 3 சதங்கள் அடிப்பார் என கணித்திருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story