பார்டர்-கவாஸ்கர் டிராபி; இந்திய அணி நாளை ஆஸ்திரேலியா பயணம்


பார்டர்-கவாஸ்கர் டிராபி; இந்திய அணி நாளை ஆஸ்திரேலியா பயணம்
x

கோப்புப்படம்

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்நிலையில், பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி 2 கட்டமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறது. இதில் முதல் குழு நாளை புறப்படுகிறது. நாளை மறுநாள் 2-வது குழு ஆஸ்திரேலியா செல்கிறது. நாளை ஆஸ்திரேலியாவுக்கு புறப்படும் முதல் குழுவுடன் கேப்டன் ரோகித் சர்மாவும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் தட்ப வெட்ப சூழல், ஆடுகளத்தின் தன்மை உள்ளிட்டவற்றை அறிவதற்காக ரோகித் சர்மா நாளை ஆஸ்திரேலியா செல்லும் இந்திய குழுவுடன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா மண்ணில் கடந்த இரண்டு தொடர்களையும் இந்தியா தொடர்ச்சியாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த தொடருக்கான இந்திய அணி விவரம்;

ரோகித் சர்மா (கேப்டன்), பும்ரா (துணைக்கேப்டன்), ஜெய்ஸ்வல், அபிமன்யூ ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.


Next Story