இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவின் ஆடும் அணி அறிவிப்பு
காயம் காரணமாக 2-வது போட்டியிலிருந்து விலகிய ஹேசில்வுட் அணிக்கு திரும்பியுள்ளார்.
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஸ்டேடியத்தில் நாளை இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியாவின் ஆடும் அணி (பிளேயிங் 11) அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் அணிக்கு திரும்பியுள்ளார். மற்றபடி அனைத்து வீரர்களும் அணியில் தொடருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் 11 பின்வருமாறு:-
உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட்.