2வது டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா


2வது டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
x

2வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 147 ரன்கள் சேர்த்துள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி, ஒருநாள் கிரிக்கெட்டில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 ஆட்டம் பிரிஸ்பென்னில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் மேதிவ் ஷார்ட் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹிரிஸ் ரால்ப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கி விளையாடி வருகிறது.


Next Story