2024ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக ஆப்கானிஸ்தான் ஆல் ரவுண்டர் தேர்வு


2024ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக ஆப்கானிஸ்தான் ஆல் ரவுண்டர் தேர்வு
x

image courtesy: twitter/@ICC

2024ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக ஆப்கானிஸ்தான் ஆல் ரவுண்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தை கணக்கில் கொண்டு இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அந்த வகையில், 2024-ம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்திருந்தது.

அந்த பட்டியலில் இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்கா மற்றும் குசல் மென்டிஸ், ஆப்கானிஸ்தான் ஆல் ரவுண்டர் அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் வெஸ்ட் இண்டீசின் ஷெர்பான் ரூதர்போர்டு ஆகிய 4 பேர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களில் 2024-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை ஆப்கானிஸ்தான் ஆல் ரவுண்டர் அஸ்மத்துல்லா உமர்சாய் தட்டி சென்றுள்ளார். இவர் கடந்த வருடம் 14 போட்டிகளில் விளையாடி 417 ரன்கள் மற்றும் 17 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.


Next Story