இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; நியூசிலாந்தின் டெவான் கான்வே விலகல் - காரணம் என்ன..?


இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; நியூசிலாந்தின் டெவான் கான்வே விலகல் - காரணம் என்ன..?
x

Image Courtesy : AFP

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

வெல்லிங்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் வரும் 14ம் தேதி ஹாமில்டனில் தொடங்குகிறது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் முன்னணி வீரரான டெவான் கான்வே விலகி உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கான்வே - கிம் தம்பதிக்கு இந்த வாரத்தில் குழந்தை பிறக்க உள்ளதால் அவர் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மார்க் சாம்ப்மென் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Next Story