3வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பார்ல்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி,பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது . முன்னதாக மழை பெய்த காரணத்தால் இந்த போட்டி 47ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story