3வது ஒருநாள் போட்டி; வெஸ்ட் இண்டீஸ்க்கு 264 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து


3வது ஒருநாள் போட்டி; வெஸ்ட் இண்டீஸ்க்கு 264 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து
x

Image Courtesy: AFP

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக மேத்யூ போர்டு 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பார்படாஸ்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இந்நிலையில், ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் வில் ஜேக்ஸ் ஆகியோர் களம் இறங்கினர்,

இதில் பில் சால்ட் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் ஜேக்ஸ் 5 ரன், ஜோர்டன் காக்ஸ் 1 ரன், லிவிங்ஸ்டன் 6 ரன், சாம் கர்ரன் 40 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து மவுஸ்லி, பில் சால்டுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் இருவரும் அரைசதம் அடித்தனர்.

இருவரும் அரைசதம் அடித்த நிலையில் சால்ட் 74 ரன்னிலும், மவுஸ்லி 57 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஓவர்டென் மற்றும் ஆர்ச்சர் களம் இறங்கினர். இறுதியில் இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக மேத்யூ போர்டு 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 264 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடி வருகிறது.


Next Story