2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு


2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
x

image courtesy: AFP

தினத்தந்தி 6 Dec 2024 9:04 AM IST (Updated: 6 Dec 2024 9:13 AM IST)
t-max-icont-min-icon

முதல் போட்டியை தவற விட்ட கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளார்.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக அடிலெய்டு ஓவலில் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச உள்ளது.

இந்திய அணியில் 3 மாற்றங்களாக துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் படிக்கல் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு:-

இந்தியா:- ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோகித் சர்மா (கேப்டன்), நிதிஷ் ரெட்டி, அஸ்வின், ஹர்ஷித் ராணா, பும்ரா, சிராஜ்.

ஆஸ்திரேலியா:- உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலந்து.


Next Story