இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் நியூசிலாந்து தடுமாற்றம்


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் நியூசிலாந்து தடுமாற்றம்
x

நியூசிலாந்து - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

வெலிங்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 54.4 ஓவர்களில் 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 123 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் நாதன் சுமித் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து ஆரம்பம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கான்வே 11 ரன்களிலும், லதாம் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த வில்லியம்சன் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 86 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. டாம் பிளண்டெல் 7 ரன்களுடனும், வில்லியம் ஓரூர்க் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.


Next Story