2வது ஒருநாள் போட்டி; ஷாண்டோ அரைசதம்... வங்காளதேசம் 252 ரன்கள் சேர்ப்பு


2வது ஒருநாள் போட்டி; ஷாண்டோ அரைசதம்... வங்காளதேசம் 252 ரன்கள் சேர்ப்பு
x

Image Courtesy: @ACBofficials

ஆப்கானிஸ்தான் தரப்பில் நங்கெயாலியா கரோட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

ஷார்ஜா,

ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக தன்சித் ஹசன் மற்றும் சவுமியா சர்கார் ஆகியோர் களம் இறங்கினர். இதில் தன்சித் ஹசன் 22 ரன்னிலும், சவுமியா சர்கார் 35 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து ஷாண்டோ மற்றும் மெஹதி ஹசன் மிராஸ் ஜோடி சேர்ந்தனர்.

இதில் ஷாண்டோ ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தன. இதில் மெஹதி ஹசன் மிராஸ் 22 ரன்னிலும், தவ்ஹித் ஹ்ரிடோய் 11 ரன்னிலும், மஹ்மதுல்லா 3 ரன்னிலும் அவுட் ஆகினர். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய ஷாண்டோ அரைசதம் அடித்த நிலையில் 77 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஜாக்கர் அலி மற்றும் நசும் அகமது களம் இறங்கினர்.

இதில் நசும் அகமது 25 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் வங்காளதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 252 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் ஷாண்டோ 77 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் நங்கெயாலியா கரோட் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 253 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் ஆட உள்ளது.


Next Story