2024-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு.. விவரம்


2024-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு.. விவரம்
x

image courtesy: twitter/@ICC

2024-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரர், வீராங்கனை விருது வென்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தை கணக்கில் கொண்டு இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அந்த வகையில், 2024-ம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்திருந்தது.

அதன்படி இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன், இலங்கை பேட்ஸ்மேன் கமிந்து மென்டிஸ், பாகிஸ்தானின் சைம் அயூப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இதில் 2024-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரர் விருதை இலங்கை பேட்ஸ்மேன் கமிந்து மென்டிஸ் தட்டி சென்றுள்ளார்.

அதேபோல் வளர்ந்து வரும் வீராங்கனை விருத்துக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஷ்ரேயங்கா பாட்டீல், அயர்லாந்து வீராங்கனை பிரேயா சார்ஜென்ட், ஸ்காட்லாந்தின் சஸ்கியா ஹார்லி மற்றும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அன்னெரி டெர்க்சன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களில் 2024-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீராங்கனை விருதிற்கு அன்னெரி டெர்க்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Next Story