ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி: விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 115 ரன்கள் அடித்தது.
ஹராரே,
ஜிம்பாப்வே - இந்தியா இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 115 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் அறிமுக வீரரான அபிஷேக் சர்மா களமிறங்கினர். இதில் அபிஷேக் சர்மா சந்தித்த முதல் ஓவரின் 4-வது பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கெய்க்வாட் 7 ரன்களிலும், ரியான் பராக் 2 ரன்களிலும், ரிங்கு சிங் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர்.
தற்போது வரை இந்தியா 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்களுடன் தடுமாறி வருகிறது. கில் 19 ரன்களுடனும், துருவ் ஜுரெல் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர்.