ஆஸ்திரேலியா வெற்றி.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம் என்ன..?
![ஆஸ்திரேலியா வெற்றி.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம் என்ன..? ஆஸ்திரேலியா வெற்றி.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம் என்ன..?](https://media.dailythanthi.com/h-upload/2025/02/09/38480069-ausct.webp)
image courtesy: twitter/@ICC
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
துபாய்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தொடரை முழுமையாக கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் ஆக்கியது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நிறைவடைந்தது.
இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (69.44 சதவீதம்) முதல் இடத்திலும், சில புள்ளிகள் கூடுதலாக பெற்ற நிலையில் ஆஸ்திரேலியா (67.54 சதவீதம்) 2வது இடத்திலும், இந்தியா (50.00 சதவீதம்) 3வது இடத்திலும், நியூசிலாந்து (48.21 சதவீதம்) 4வது இடத்திலும், இங்கிலாந்து (43.18 சதவீதம்) 5வது இடத்திலும் உள்ளன. சில புள்ளிகள் இழந்த நிலையில் இலங்கை (38.46 சதவீதம்) 6-வது இடத்திலும் உள்ளது.
தொடர்ந்து 7 முதல் 9 இடங்களில் முறையே வங்காளதேசம் (31.25 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (28.21 சதவீதம்), பாகிஸ்தான் (27.98 சதவீதம்) அணிகள் உள்ளன.