சென்னை அணி சாம்பியன் கோப்பையை வென்றது


சென்னை அணி சாம்பியன் கோப்பையை வென்றது
x

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னை அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னை அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

டேபிள் டென்னிஸ் போட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தமிழக டேபிள் டென்னிஸ் அமைப்பு நடத்தியது. இப்போட்டியில் 22 மாவட்டங்களை சேர்ந்த 250 வீரர்கள் 180 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

3 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இறுதியாக சென்னை அணி முதலிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது. மதுரை அணிக்கு 2-வது இடம் கிடைத்தது.

பரிசளிப்பு விழா

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. பல்கலைக்கழக துணை தலைவர் சசி ஆனந்த் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்ற அணிக்கு ரூ.50,000 வழங்கி, சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கி பாராட்டினார். முடிவில் சர்வதேச டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை அருள்செல்வி நன்றி கூறினார். சில்லாங்கில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டிக்கு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்ட வீரர்கள் விஸ்வா தின தயாளனக்கு ரூ.1 லட்சமும், சந்தோஷ்குமார், அபினேஷ் பிரசன்னா, கிஷோர் குமார் ஆகியோருக்கு தலா ரூ. 25000-ம் நிதி உதவி வழங்கப்பட்டது. விழாவில் பதிவாளர் வாசுதேவன், பேராசிரியர் முத்து கண்ணன், தமிழக டேபிள் டென்னிஸ் அமைப்பு நிர்வாகிகள் ராம்குமார், செல்வகுமார், சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கவிதா, செல்வ கணேஷ், சிதம்பரம் மற்றும் பலர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story