பாரீஸ் ஒலிம்பிக் கோலாகல தொடக்கம் - இந்திய தேசியக் கொடியை ஏந்திச்சென்ற சரத்கமல், பி.வி.சிந்து


தினத்தந்தி 26 July 2024 10:41 PM IST (Updated: 27 July 2024 6:03 AM IST)
t-max-icont-min-icon

பாரீசில் உள்ள செய்ன் ஆற்றில் துவக்க விழா அணிவகுப்பு நடைபெற்றது.

பாரீஸ்,

உலகின் அனைத்து நாடுகளையும் ஓரணியில் இணைக்கும் ஈடில்லா சக்தி ஒலிம்பிக் போட்டிக்கு மட்டுமே உண்டு. பண்டைய கிரேக்க நாட்டில் மதசடங்கு மற்றும் கடவுளின் புகழை பரப்பும் ஒரு விழாவாக உருவான ஒலிம்பிக் போட்டி, ரோமானியர்களின் படையெடுப்புகளால் நசுங்கிப் போனது. அதன் பிறகு பல நூற்றாண்டுகளை கடந்து நவீன ஒலிம்பிக்காக 1896-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. அது தான் அதிகாரபூர்வ முதலாவது ஒலிம்பிக்காகும்.

அதன் பிறகு ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. உலக போர் காரணமாக 3 முறை ஒலிம்பிக் போட்டி ரத்தானது. கடைசியாக 2021-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி அரங்கேறியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 32 விளையாட்டுகளில் 329 பந்தயங்கள் நடக்கின்றன. இந்த தொடரில் முதல் நாளான நேற்று போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில் 2ம் நாளான இன்று மொத்தம் 14 தங்கப்பதக்கங்களுக்கு போட்டிகள் நடக்கின்றன. பாரீஸ் ஒலிம்பிக்கின் முதல் சாம்பியனை நிர்ணயிக்கும் போட்டியாக துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு அமைந்துள்ளது. இதன் தகுதி சுற்று இந்திய நேரப்படி பகல் 12 30 மணிக்கும், இறுதிப்போட்டி மாலை 4 30 மணிக்கும் நடைபெறுகிறது. இதில் இந்திய தரப்பில் ரமிதா-அர்ஜூன் பாபுதா, இளவேனில்-சந்தீப்சிங் ஆகிய ஜோடிகள் களம் இறங்குகிறது.


Live Updates


Next Story