ஜார்கண்ட் சட்டசபை இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரன் மனைவி முன்னிலை
ஜார்கண்ட் மாநிலம் காண்டே சட்டசபை இடைத்தேர்தலில் ஹேமந்த சோரன் மனைவி கல்பனா முன்னிலை பெற்றுள்ளார்
ராஞ்சி,
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட் மாநிலம் காண்டே தொகுதி எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ததை அடுத்து அந்த தொகுதிக்கு மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடந்தது.
இந்த இடைத்தேர்தலில் அம்மாநிலத்தை ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் போட்டியிட்டார். இந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் திலீப் குமார் வர்மா களமிறக்கப்பட்டார்.
தற்போதைய நிலவரப்படி காண்டே தொகுதியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் கல்பனா 16 ஆயிரத்து 203 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் திலீப் குமார் வர்மா 15 ஆயிரத்து 55 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.