நாடாளுமன்ற தேர்தலுக்குப்பிறகு மத்தியில் எந்த கூட்டணியிலும் இணைய மாட்டோம்: மிசோரம் முதல்-மந்திரி அறிவிப்பு


நாடாளுமன்ற தேர்தலுக்குப்பிறகு மத்தியில் எந்த கூட்டணியிலும் இணைய மாட்டோம்: மிசோரம் முதல்-மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 20 April 2024 4:45 AM IST (Updated: 20 April 2024 4:53 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் இருந்து எங்களை யாரும் கட்டுப்படுத்துவதை விரும்பவில்லை என்று மிசோரம் முதல்-மந்திரி சோரம்தங்கா கூறியுள்ளார்.

ஐஸ்வால்,

நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதில் மிசோரமின் ஒரே தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இதையொட்டி முதல்-மந்திரியும், சோரம் மக்களின் முன்னணி தலைவருமான லால்டுகோமா தலைநகர் ஐஸ்வாலில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி ஒன்றில் தனது வாக்கை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், தேர்தலுக்குப்பிறகு மத்தியில் எந்த கூட்டணியிலும் இணைய மாட்டோம். தேசிய ஜனநாயக கூட்டணி அல்லது இந்தியா கூட்டணி என எந்த அணியிலும் சேரமாட்டோம். எங்கள் அடையாளத்தை பாதுகாக்க விரும்புகிறோம். டெல்லியில் இருந்து எங்களை யாரும் கட்டுப்படுத்துவதை விரும்பவில்லை.

எந்தவொரு பிரச்சினையிலும் இங்கிருந்தவாறே சுதந்திரமாக முடிவு எடுக்க விரும்புகிறோம்' என்று கூறினார்.


Next Story