'கழகத்தின் உரிமைக் குரல்கள் மக்களவையில் இன்னும் அழுத்தமாக ஒலிக்கும்' - உதயநிதி ஸ்டாலின்


Voices in Lok Sabha Udhayanidhi Stalin
x

Image Courtesy : @Udhaystalin

தினத்தந்தி 4 Jun 2024 4:48 PM GMT (Updated: 5 Jun 2024 5:38 AM GMT)

கழகத்தின் உரிமைக் குரல்கள் மக்களவையில் இன்னும் அழுத்தமாக ஒலிக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றியை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் கழகத்தின் உரிமைக் குரல்கள் மக்களவையில் இன்னும் அழுத்தமாக ஒலிக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் 40/40 என்ற வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற ஜனநாயகப் பண்புடன் கழகத்தைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா, 50 ஆண்டு காலம் தலைவராக கழகத்தை வளர்த்தெடுத்து வழிநடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சென்று தேர்தல் வெற்றியைச் சமர்ப்பித்தோம். 75 ஆண்டு காலம், மாநில சுயாட்சிக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் முழங்கிய கழகத்தின் உரிமைக் குரல்கள் மக்களவையில் இன்னும் அழுத்தமாக ஒலிக்கும்!"

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.




Next Story