கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு எஸ்.டி.பி.ஐ. ஆதரவு - அமித்ஷா விமர்சனம்


கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு எஸ்.டி.பி.ஐ. ஆதரவு - அமித்ஷா விமர்சனம்
x
தினத்தந்தி 3 April 2024 1:50 AM IST (Updated: 3 April 2024 12:49 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் ஆட்சியின்கீழ் கர்நாடக மக்களால் பாதுகாப்பாக இருக்க முடியுமா? என்று அமித்ஷா கேள்வி எழுப்பினார்.

பெங்களூரு,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது. இதனிடையே தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. அமைப்பின் அரசியல் இயக்கமாக பார்க்கப்படும் எஸ்.டி.பி.ஐ. கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து தங்கள் நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சியினர் விளக்க வேண்டும் என கேரள மாநில பா.ஜ.க. தலைவர் கே.சுரேந்திரன் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் ராமநகரா பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, "பெங்களூருவில் ஒருபுறம் குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. மறுபுறம் காங்கிரஸ் கட்சிக்கு எஸ்.டி.பி.ஐ. ஆதரவு தெரிவிப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது உண்மையாக இருந்தால், காங்கிரஸ் ஆட்சியின்கீழ் கர்நாடக மக்களால் பாதுகாப்பாக இருக்க முடியுமா?" என்று விமர்சித்தார்.


Next Story