'பிரதமர் மோடியின் தலைமை இந்தியாவை சர்வதேச தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது' - ஜோதிராதித்ய சிந்தியா


பிரதமர் மோடியின் தலைமை இந்தியாவை சர்வதேச தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது - ஜோதிராதித்ய சிந்தியா
x

இந்தியாவை சர்வதேச தளத்திற்கு கொண்டு சென்ற பிரதமர் மோடியின் தலைமை மீது தனக்கு நம்பிக்கை உள்ளதாக ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 29 மக்களவை தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு கடந்த மாதம் 19-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், 26-ந்தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இன்றைய தினம் 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தொடர்ந்து 4-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 13-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, இன்று குவாலியரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவை சர்வதேச தளத்திற்கு கொண்டு சென்ற பிரதமர் மோடியின் தலைமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்த தொகுதி, மாநிலம் மற்றும் இந்த நாட்டின் மக்கள் பிரதமர் மோயை நம்புகிறார்கள். பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் மத்திய பிரதேசத்தின் குணா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஜோதிராதித்ய சிந்தியா போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ராவ் யத்வேந்திரா சிங் களமிறங்கியுள்ளார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜ.க. வேட்பாளர் கிருஷ்ண பால் சிங் யாதவிடம் தோல்வியடைந்தார். அந்த சமயத்தில் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story