'விவாதத்திற்கான அழைப்பை ஏற்கும் தைரியம் பிரதமருக்கு இன்னும் வரவில்லை' - காங்கிரஸ் விமர்சனம்


விவாதத்திற்கான அழைப்பை ஏற்கும் தைரியம் பிரதமருக்கு இன்னும் வரவில்லை - காங்கிரஸ் விமர்சனம்
x

விவாதத்திற்கான அழைப்பை ஏற்கும் தைரியம் பிரதமருக்கு இன்னும் வரவில்லை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பொது தளத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும், இதில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், அஜித் பி.ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் ஆகியோர் கடந்த சில நாள்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமருடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என ராகுல் காந்தி அறிவித்தார். இந்நிலையில் விவாதத்திற்கான அழைப்பை ஏற்கும் தைரியம் பிரதமருக்கு இன்னும் வரவில்லை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "விவாதத்திற்கான அழைப்பை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டு ஒரு நாள் ஆகிவிட்டது. ஆனால் 56 அங்குலம் கொண்ட மார்புக்கு விவாதத்திற்கான அழைப்பை ஏற்கும் தைரியம் இன்னும் வரவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story