நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு


தினத்தந்தி 7 May 2024 7:19 AM IST (Updated: 7 May 2024 9:04 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

காந்திநகர்,


Live Updates

  • 7 May 2024 10:14 AM IST

    9 மணி வாக்குப்பதிவு நிலவரம்

    நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தலில் நாடு முழுவதும் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடக்கிய தேர்தலில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 10.57 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

  • 7 May 2024 8:59 AM IST

    நாடாளுமன்ற தேர்தலில் நான் வாக்களித்துவிட்டேன். நமது ஜனநாயகத்தை வலிமைப்படுத்த அனைவரும் வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் - பிரதமர் மோடி

  • 7 May 2024 8:02 AM IST

    பிரதமர் மோடி வாக்களித்தார்

    குஜராத் மாநிலம் அகமதாபாத் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ரானிப் பகுதியில் உள்ள நிஷான் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.

  • 7 May 2024 7:41 AM IST

    குஜராத் மாநிலம்  அகமதாபாத் கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட ரானிப் பகுதியில் உள்ள நிஷான் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க பிரதமர் மோடி வந்துள்ளார். வாக்குச்சாவடிக்கு பிரதமர் மோடியுடன், உள்துறை மந்திரி அமித்ஷாவும் வாக்களிக்க வந்துள்ளார். வாக்குச்சாவடிக்கு பிரதமர் நடந்தே சென்றார்.

    காந்திநகர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக உள்துறை மந்திரி அமித்ஷா போட்டியிருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 7 May 2024 7:37 AM IST

    நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது.

    இந்நிலையில், 93 தொகுதிகளுக்கு இன்று 3ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 3-வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. குஜராத் (25 தொகுதிகள்), கர்நாடகா (14), மராட்டியம் (11), உத்தரபிரதேசம் (10), மத்திய பிரதேசம் (9), சத்தீஷ்கார் (7), பீகார் (5), அசாம் (4), மேற்கு வங்காளம் (4), கோவா (2), தத்ரா-ஹவேலி-டையூ-டாமன் (2) என 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது.

    குஜராத்தில் 25 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடகாவில் ஏற்கனவே 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ள நிலையில், இன்று எஞ்சிய 14 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

    குஜராத்தின் சூரத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேவேளை 2-வது கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற இருந்த மத்திய பிரதேசத்தின் பெதுல் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியின் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இன்று நடைபெற்று வரும் 3ம் கட்ட தேர்தலில் பெதுல் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    3ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் வரும் 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 


Next Story