நாடாளுமன்ற தேர்தல்: சில தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-வது இடம்


நாடாளுமன்ற தேர்தல்: சில தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-வது இடம்
x

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இதில், நாம் தமிழர் கட்சி சில தொகுதிகளில் 3-வது இடத்தில் உள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, திருச்சி, ஈரோடு, நாகை, புதுச்சேரி ஆகிய இடங்களில் நாதக வேட்பாளர்கள் 3-வது இடத்தில் உள்ளனர்.

ஈரோடு நிலவரம்:-

கே.இ.பிரகாஷ் (திமுக) - 91,193

ஆற்றல் அசோக்குமார் (அதிமுக) - 51,256

டாக்டர் மு.கார்மேகன்(நாம் தமிழர் கட்சி) - 14,861

பி.விஜயகுமார் (தமிழ் மாநில காங்கிரஸ்) - 11,621

நெல்லை நிலவரம்:-

ராபர்ட் புரூஸ் (காங்கிரஸ்) - 1,07,348

நயினார் நாகேந்திரன் (பாஜக) - 74,074

பா.சத்யா (நாம் தமிழர் கட்சி) - 21,486

எம்.ஜான்சி ராணி (அதிமுக) - 20,369

கன்னியாகுமரி நிலவரம்:-

விஜய் வசந்த் (காங்கிரஸ்) - 80,827

பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக) - 48,187

மரிய ஜெனிபர் (நாம் தமிழர் கட்சி) - 6,547

பசிலியான் நசரேத் (அதிமுக) - 6,302

திருச்சி நிலவரம்:-

துரை வைகோ (மதிமுக) - 1,06,046

பி.கருப்பையா (அதிமுக) - 50,665

ஜல்லிக்கட்டு ராஜேஷ் (நாம் தமிழர் கட்சி) - 22,635

பி.செந்தில் நாதன் (அமமுக) - 19,330

நாகை நிலவரம்:-

வை.செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) - 1,39,793

சுர்ஜித் சங்கர் (அதிமுக) - 76,558

மு.கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) - 39,926

எஸ்.ஜி.எம்.ரமேஷ் (பாஜக) - 26,194

புதுச்சேரி நிலவரம்:-

வைத்திலிங்கம் (காங்கிரஸ்) - 1,48,779

நமச்சிவாயம் (பாஜக) - 1,17,005

ஆர்.மேனகா (நாம் தமிழர் கட்சி) - 13,912

ஜி.தமிழ்வேந்தன் (அதிமுக) - 7,822


Next Story