நாடாளுமன்ற தேர்தல்: பா.ஜ.க. தேர்தல் அறிக்கை குழு அமைப்பு


நாடாளுமன்ற தேர்தல்: பா.ஜ.க. தேர்தல் அறிக்கை குழு அமைப்பு
x
தினத்தந்தி 30 March 2024 11:05 AM GMT (Updated: 30 March 2024 11:10 AM GMT)

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை குழுவில் 27 பேர் இடம் பெற்றுள்ளனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை குழுவில் 27 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அதன்படி , நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா, ஸ்மிருதி இரானி, தர்மேந்திர பிரதான், ராஜு சந்திரசேகர் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கை குழுவில் இடம் பெற்றுள்ளனர்.


Next Story