தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்- நிதின் கட்காரி பேட்டி
கடந்த முறை 54 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை 75 சதவீத வாக்குப்பதிவை கொண்டு செல்வதே எங்களது லட்சியம் என்று நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
நாக்பூர்,
நாடு முழுவதும் இன்று 21 மாநிலங்களில் உள்பட்ட102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மக்கள் காலை முதலே தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய மத்திரியும் பா.ஜ.க. வேட்பாளருமான நிதின் கட்கரி மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள டவுன்ஹால் பகுதியில் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
"நாட்டின் மிகப்பெரிய பண்டிகையை நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம். நாக்பூரில், வெப்பநிலை அதிகமாக இருப்பதால், சீக்கிரம் வந்து வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு நான் குறிப்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். கடந்த முறை 54 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை 75 சதவீத வாக்குப்பதிவை கொண்டு செல்வதே எங்களது லட்சியம். இந்த தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்."
இவ்வாறு அவர் கூறினார்.