மண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் வெற்றி


மண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் வெற்றி
x

ஹமிர்பூர் தொகுதியில் மத்திய மந்திரி அனுராக் சிங் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார்.

சிம்லா,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் பா.ஜ.க. 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத் 5,37,022 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்யா சிங் 4,62,267 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 74,755 ஆகும்.

இதேபோல, அம்மாநிலத்தின் ஹமிர்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் போட்டியிட்டார். அவர் 6,07,068 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சட்பால் ரைசாடா 4,24,711 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 1,82,357 ஆகும். இதன்மூலம் தொடர்ந்து 5-வது முறையாக மக்களவை தேர்தலில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார்.


Next Story