மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் அமைதியாக நடந்த மறுவாக்குப்பதிவு
மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நடந்த மறுவாக்குப்பதிவில் 81 சதவீததிற்கும் அதிகமான வாக்குகள் பதிவானது.
இம்பால்,
நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் கடந்த 19-ந்தேதி நடந்தது. இதில் மணிப்பூரின் 2 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது.
கலவரத்தால் பெரும் பதற்றத்தில் இருக்கும் மணிப்பூரில், வாக்குப்பதிவு நாளின்போதும் கலவரம் வெடித்தது. வாக்குச்சாவடிகளில் துப்பாக்கிச்சூடு, மிரட்டல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேதப்படுத்துதல் போன்ற வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
இவ்வாறு சமூக விரோத செயல்கள் நடந்த 11 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடிகளுக்கு நேற்று மறுதேர்தல் நடந்தது.
காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு முற்றிலும் அமைதியாக நடந்தது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த மறுதேர்தலில் 81.6 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
Related Tags :
Next Story