காஷ்மீர் பள்ளத்தாக்கில் பா.ஜனதா போட்டியிடாதது ஏன்? உமர் அப்துல்லா கேள்வி
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 3 தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் 5 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் ஜம்முவில் உள்ள 2 தொகுதிகளில் மட்டுமே பா.ஜனதா போட்டியிடுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 3 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இந்த நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு வந்ததாக பா.ஜனதா கூறி வருகிறது. இவ்வளவு பெரிய சேவையை செய்திருந்தால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏன் வேட்பாளர்களை நிறுத்தவில்லை" என கேள்வி எழுப்பினார்.
Related Tags :
Next Story