கேரளாவில் 20 தொகுதிகளிலும் கம்யூனிஸ்டு கூட்டணி அமோக வெற்றி பெறும் - பினராயி விஜயன் பேட்டி


தினத்தந்தி 26 April 2024 3:18 PM IST (Updated: 26 April 2024 4:19 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரம்,

நாடாளுமன்ற தேர்தலில், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான கம்யூனிஸ்டு கூட்டணி (எல்டிஎப்) அமோக வெற்றி பெறும் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலை யொட்டி, கண்ணூர் மாவட்டம், பினராயி அரசு ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச் சாவடியில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் காலையில் வாக்களித்தார். வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான கம்யூனிஸ்டு கூட்டணி (எல்டிஎப்) அமோக வெற்றி பெற்று சாதனை படைக்கும்.

அனைத்து தொகுதிகளிலும் கம்யூனிஸ்டு கூட்டணிக்கு அமோக வெற்றி வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் மீது கேரள மக்கள் விரோத மனப்பான்மை கொண்டுள்ளனர். அதனால் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். பா.ஜ.க. கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது, 3-வது இடத்திற்கு தள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story