'5 கட்ட தேர்தல்களில் ஏற்கனவே அரசாங்கம் அமைந்துவிட்டது' - அசாம் முதல்-மந்திரி பேச்சு


Government already formed Assam CM
x

Image Courtesy : ANI

5 கட்ட தேர்தல்களில் ஏற்கனவே அரசாங்கம் அமைந்துவிட்டது என அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

பாட்னா,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து 7-ம் கட்டமாக 57 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றி பெறும் என்றும், 5 கட்ட தேர்தல்களில் ஏற்கனவே அரசாங்கம் அமைந்துவிட்டது என்றும் அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் முதல் 5 கட்ட வாக்குப்பதிவுகளில் ஏற்கனவே அரசாங்கம் அமைக்கப்பட்டுவிட்டது. 6-வது மற்றும் 7-வது கட்ட தேர்தல்கள் முடிந்த பிறகு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றிவிடும்.

பொது சிவில் சட்டம் என்பது நமது அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ளது. நாங்கள் அம்பேத்கர் எழுதிய அரசிலமைப்பு சட்டத்தை பின்பற்றுகிறோம். எனவே, பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறுகிறோம்."

இவ்வாறு ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.


Next Story