காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. - திருநெல்வேலியில் பரபரப்பு
திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து முன்னாள் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. வேட்புமனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி,
தி.மு.க. கூட்டணியில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உட்கட்சி பூசல் காரணமாக திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதில் இழுபறி நீடித்து வந்தது.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் ராபர்ட் ப்ரூசை வேட்பாளராக கடந்த 25ம் தேதி காங்கிரஸ் அறிவித்தது.
காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராபர்ட் ப்ரூஸ் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூசை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசில் ராமசுப்பு வாய்ப்பு கேட்டிருந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு ராபர்ட் ப்ரூசுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, ராமசுப்பு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த ராமசுப்பு, நான் காங்கிரஸ்காரன். சுயேச்சையாக போட்டியிடவில்லை என்று கூறினார்.