கல்யாணத்துக்கு எல்லோரும் வருவாங்க.. ஆனா மாப்பிள்ளை எங்க ஆளுதான் - செல்லூர் ராஜு கலகல பேட்டி


கல்யாணத்துக்கு எல்லோரும் வருவாங்க.. ஆனா மாப்பிள்ளை எங்க ஆளுதான் - செல்லூர் ராஜு கலகல பேட்டி
x

மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் டாக்டர் சரவணன் என்பவர் போட்டியிடுகிறார்.

மதுரை,

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி நடக்கிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அ.தி.மு.க. சார்பில் டாக்டர். சரவணன் களமிறக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை நகரில் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரம் வரை தனக்கே உரித்தான பாணியில் பேசி ஸ்கோர் செய்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. டாக்டர் விவரமான ஆளுத்தான்.. நான் பேசுறத கேட்கலைன்னா ரத்தி கக்கி சாவீங்க..என அடுத்து அடுத்து கவுண்டர் கொடுத்த கவனம் ஈர்த்த செல்லூர் ராஜு, தேர்தலில் மாப்பிள்ளை இவர் தான் சட்டை அ.தி.மு.க. சட்டை என செந்தில் பாணியில் ஒரு காமெடி சரவெடியை கொளுத்தி போட்டுள்ளார்.

மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடிய அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் சரவணன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜா அவர்களுடன் இணைந்து தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் சமுதாய பெரியவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வரக்கூடிய நிலையில் இன்று மதுரை புதூர் பகுதியில் பேராயர் அந்தோணி பாப்பு சாமி அவர்களை சந்தித்து ஆதரவு கேட்டனர். முன்னதாக பேராயர் அந்தோணி பாப்பு சாமி அவர்கள் வேட்பாளரை ஆசிர்வதித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில்,

"கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் 1.75 லட்சம் வாக்குகள்வித்தியாசத்தில்வெற்றியைதவற விட்டு விட்டோம். இந்த நிலையில் இன்று பாதிரியார் அவர்களை சந்தித்தபோது அவர் தனதுமனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக பா.ஜ.க.,வுடன் நீங்கள் இணைந்தது எங்களது மிகப்பெரிய வருத்தம்.கல்வி நிறுவனங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய சேதத்தையும் பாதிப்பையும் உருவாக்கி விட்டார்கள். அவர்களோடு இணைந்து எங்களுக்கு பெரிய வேதனையாக இருந்தது. தற்போது நீங்கள் வந்தது நிரந்தரமாக இருக்க வேண்டும். உங்களுக்கு எங்களது பரிபூரணமான ஆதரவு உண்டு எங்களுடைய ஆசீர்வாதம் குறிப்பாக ஆண்டவருடைய ஆசீர்வாதம் உறுதியாக உங்களுக்கு உண்டு. நீங்கள் வரவேண்டும் என்று எங்களை வாழ்த்தி அனுப்பி இருக்கிறார். மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. நிறைவாகவும் இருந்தது" என்றார்.

மேலும் மோடி, அமித்ஷா வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், "தேர்தல் கல்யாணத்தில் யார் வேண்டுமானாலும் வருவார்கள். மாப்பிள்ளை யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மாப்பிள்ளை எங்களுடைய நபர்தான். அதனால் வேறு யாரும் கிடையாது. மற்றவர்கள் எல்லாம் எங்களது வேட்பாளரை வரவேற்கவும் அவரை பார்க்கவும் வர உள்ளார்கள். மாப்பிள்ளை இவர்தான் மற்றவர்கள் வேண்டுமானாலும் சட்டை போடலாம் இவர் போட்டிருக்கக்கூடிய சட்டை அ.தி.மு.க. சட்டைதான் இவர் இருப்பதும் அ.தி.மு.க.,வில்தான் என பதிலளித்தார்.


Next Story