நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சதி வலை: அண்ணாமலை குற்றச்சாட்டு


நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சதி வலை: அண்ணாமலை குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 April 2024 12:32 PM IST (Updated: 8 April 2024 12:39 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கோவை,

கோவையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான சதி வலையில் அவர் பெயர் சொல்லப்பட்டுள்ளது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. கைப்பற்றப்பட்ட பணத்திற்கும், தனக்கும் தொடர்பு இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க.வினர்தான் உண்மையான திருடர்கள். பணத்தை பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமை ஒரு கட்சிக்கு இல்லையென்றால் அது திராவிட முன்னேற்ற கழகம்தான். தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி.

தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 4 சர்வதேச விளையாட்டு மைதானம் தேவை. விளையாட்டு மைதானம் தேவை தான், ஆனால் முதலில் சாலையை சீரமைக்க வேண்டும். பிரதமர் மோடி மேட்டுப்பாளையத்தில் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இம்முறை தங்கச் சுரங்கத்தையே தி.மு.க. கொட்டினாலும் கோவையில் பா.ஜ.க.தான் வெற்றிபெறும். பதிவாகும் வாக்குகளில் 60% பெற்று நிச்சயம் வெற்றி பெறுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story