தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்


தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 1 April 2024 1:26 PM IST (Updated: 1 April 2024 4:06 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 950 பேர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

அதேவேளை, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலை சுமுகமாக நடத்த தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும்பணி இன்று தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும்பணியை மேற்கொண்டு வருகின்றனர். வீடு வீடாக சென்று அதிகாரிகள் பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். பூத் சிலிப் விநியோகம் வரும் 14ம் தேதியுடன் நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story