மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் பா.ஜனதா ஆலோசனைக் கூட்டம்


BJP meeting in Delhi
x

Image Courtesy : @BJP4India

மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் ஜே.பி.நட்டா தலைமையில் பா.ஜனதா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதைத் தொடர்ந்து 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இன்று 5-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இதுவரை பா.ஜனதா கட்சியின் செயல்பாடு மற்றும் அடுத்தகட்ட தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்(அமைப்பு) பி.எல்.சந்தோஷ், தேசிய பொதுச் செயலாளர்கள் அருண் சிங், தருண் சுக், கட்சியின் தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் அமித் மாளவியா, தேசிய ஊடகப் பொறுப்பாளர் அனில் பலுனி மற்றும் மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story