பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி - த.ம.மு.க.தலைவர் ஜான் பாண்டியன் பேட்டி


பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி -  த.ம.மு.க.தலைவர் ஜான் பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 20 March 2024 5:43 PM IST (Updated: 21 March 2024 4:56 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. கூட்டணியில் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் அடுத்த மாதம் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க., ஓ.பன்னீர் செல்வம் அணி, டி.டி.வி . தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பெஸ்ட் ராமசாமியின் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் இடையே தமிழக பா.ஜ.க. தலைமையகத்தில் இன்று கையெழுத்தானது.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜான் பாண்டின் கூறியதாவது ,

மோடி, 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். பா.ஜகவுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி.எந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என்பதை பா.ஜ.க. தான் முடிவு செய்யும். நாங்கள் கேட்டுள்ள தொகுதி நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் நான் எந்த தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவேன். என தெரிவித்தார்.


Next Story