கருத்துக் கணிப்பு தவறாகிப்போனதால் தொலைக்காட்சி விவாதத்தில் கதறி அழுத நிர்வாகி- வைரலாகும் வீடியோ


Axis My Indias Pradeep Gupta weeps on live TV
x

இன்று மாலை நிலவரப்படி பா.ஜ.க. கூட்டணி 296 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 230 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன.

புதுடெல்லி:

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தபின், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஆளும் பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே இருந்தன. கருத்துக் கணிப்பு நடத்திய பெரும்பாலான நிறுவனங்கள் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களை பிடிக்கும் எனத் தெரிவித்தன.

இந்தியா டுடே மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், பா.ஜ.க. கூட்டணி 361 முதல் 401 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.க. கூட்டணிக்கு சவால் அளிக்கும் வகையில் இந்தியா கூட்டணியும் அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி பா.ஜ.க. கூட்டணி 296 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 230 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பாக இந்தியா டுடே தொலைக்காட்சியில் நேரலை விவாதம் நடைபெற்றது. இதில், கருத்துக் கணிப்பு நடத்திய ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரதீப் குப்தா கலந்து கொண்டார். கருத்துக் கணிப்புக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வெளியாகியிருப்பது குறித்து பிரதீப் குப்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தொடர்ந்து பதில் அளித்து வந்த அவர், ஒரு கட்டத்தில் தனது நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு தவறாகிவிட்டதை எண்ணி உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.


Next Story