நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல்: 64.40 சதவிகித வாக்குப்பதிவு


நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல்: 64.40 சதவிகித வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 8 May 2024 7:00 AM IST (Updated: 8 May 2024 8:12 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தலில் 64.40 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

டெல்லி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. இதில் முதற்கட்ட தேர்தலில் 66.14 சதவிகிதமும், 2ம் கட்ட தேர்தலில் 66.71 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, 93 தொகுதிகளுக்கு நேற்று 3ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. குஜராத் (25 தொகுதிகள்), கர்நாடகா (14), மராட்டியம் (11), உத்தரபிரதேசம் (10), மத்திய பிரதேசம் (9), சத்தீஷ்கார் (7), பீகார் (5), அசாம் (4), மேற்கு வங்காளம் (4), கோவா (2), தத்ரா-ஹவேலி-டையூ-டாமன் (2) என 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. ஆனால் ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இரவுவரை நீடித்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தலில் 64.40 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரவு 11.40 மணி நிலவரப்படி 64.40 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில வாரியாக வாக்குப்பதிவு விவரம்:-

அசாம் - 81.61%

பீகார் - 58.18%

சத்தீஷ்கார் - 71.06%

தத்ரா-ஹவேலி-டையூ-டாமன் - 69.87%

கோவா - 75.20%

குஜராத் - 58.98%

கர்நாடகா - 70.41%

மத்தியபிரதேசம் - 66.05%

மராட்டியம் - 61.44%

உத்தரபிரதேசம் - 57.34%

மேற்குவங்காளம் - 75.79%


Next Story