இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது


இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது
x

இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு,

இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷிதா ராஜபக்சே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டரகாமா பகுதியில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்ற புலனாய்வுப் பிரிவினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முன்னதாக பணமோசடி சட்டத்தின் கீழ் யோஷிதா ராஜபக்சே குற்றம் செய்துள்ளார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக அட்டர்னி ஜெனரல், குற்ற புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவுறுத்தி இருந்தார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story