பசிபிக் பெருங்கடலில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு


பசிபிக் பெருங்கடலில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு
x

கடல்களின் மழைக்காடுகள் என்று பவளப்பாறைகள் அழைக்கப்படுகின்றன.

ஹோனியரா,

ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் சாலமன் தீவுக்கூட்டம் அமைந்துள்ளது. இங்கு தேசிய புவியியல் பிரிஸ்டைன் கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட பல்வேறு கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழிடமாக திகழ்கின்றன.

இந்த பவளப்பாறையானது 32 மீட்டர் நீளம், 34 மீட்டர் அகலம் மற்றும் 5.5 மீட்டர் உயரம் கொண்டது ஆகும். மேலும் இது சுமார் 500 ஆண்டுகள் பழமையானது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதற்காக விஞ்ஞானிகளை பாராட்டிய அந்த நாட்டின் பிரதமர் ஜெரேமியா மானேல் கூறுகையில், `இது பவளப்பாறைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எதிர்கால சந்ததியினருக்கு உணர்த்துகிறது' என தெரிவித்துள்ளார்.

கடலில் பவளம் எனப்படும் ஒரு உயிரினத்தால் சுரக்கப்படும் கால்சியம் கார்பனேட்டினால் பவள பாறைகள் உருவாகின்றன. இதனை நீங்கள் அந்தமான் மற்றும் லட்சத்தீவுகளில் பார்க்கலாம்.மேலும் இவை ஏராளமான கடல் உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகவும் இருக்கின்றன. சுமார் 25 சதவிகிதம் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக இப்பவளப் பாறைகள் காணப்படுகின்றன. இவை "கடல்களின் மழைக்காடுகள்" என அழைக்கப்படுகின்றன.


Next Story