'தைவான் பிரிந்து செல்ல அனுமதிக்க மாட்டோம்' - சீன ராணுவம்


Not allow Taiwan to become independent Chinese military
x

Image Courtesy : AFP

தினத்தந்தி 1 Jun 2024 3:41 PM IST (Updated: 1 Jun 2024 3:50 PM IST)
t-max-icont-min-icon

சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

பீஜிங்,

தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தைவானுக்கு ஆதரவாக உள்ளன. இதனால் ஆத்திரமடைந்துள்ள சீனா, அவ்வப்போது தைவானை சுற்றி ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சீனாவிடம் இருந்து தைவானை ஒருபோதும் சுதந்திரமாக பிரிந்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து சீன ராணுவத்தின் லெப்டினண்ட் ஜெனரல் ஜிங் ஜியான்பெங் கூறுகையில், "தைவானை சீனாவிடம் இருந்து பிரிந்து செல்ல சீன ராணுவம் ஒருபோதும் அனுமதிக்காது. தைவானின் சுதந்திரம் என்பது போருக்கு சமம்" என்று தெரிவித்தார்.

மேலும் தைவானின் சுதந்திரத்திற்காக போர் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்காகவும், சீனாவுடன் தைவான் மீண்டும் ஒன்றிணைவதை ஊக்குவிப்பதற்காகவும், வெளிப்புற தலையீடுகளை எதிர்ப்பதற்காகவும் சீன ராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Next Story