புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான 30 சதவீத இலக்கை 2030-ம் ஆண்டுக்குள் அடைவோம் - இஸ்ரேல்


புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான 30 சதவீத இலக்கை 2030-ம் ஆண்டுக்குள் அடைவோம் - இஸ்ரேல்
x

இஸ்ரேலில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான 30 சதவீத இலக்கை 2030-ம் ஆண்டுக்குள் அடைவதற்கான செயல் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

டெல் அவிவ்,

இஸ்ரேலில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதனால், கார்பன் வெளிப்பாடு குறைவதுடன், காற்று மாசுபாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான 30 சதவீத இலக்கை 2030-ம் ஆண்டுக்குள் அடைவதற்கான செயல் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது என அந்நாட்டு ஆற்றல் மற்றும் உட்கட்டமைப்பு துறைக்கான மந்திரி கூறியுள்ளார்.

இவற்றில் இலக்கை அடைவதற்கான 88 சதவீத நடவடிக்கைகள் முன்பே அமல்படுத்தப்பட்டு விட்டன. அல்லது அமல்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேலின் ஆற்றல் பாதுகாப்புக்கு இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முக்கிய பங்கு வகிக்கும் என்று அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

2035-ம் ஆண்டுக்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான விரிவானதொரு செயல் திட்டம் வகுப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story