ஐஸ்லாந்தில் 7வது முறையாக வெடித்து சிதறிய எரிமலை


ஐஸ்லாந்தில் 7வது முறையாக வெடித்து சிதறிய எரிமலை
x

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை ஓராண்டில் 7வது முறையாக வெடித்து சிதறியது.

கிரின்டவிக் (ஐஸ்லாந்து):

தென்மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை நேற்று மாலை வெடிக்க தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஓராண்டில் ஏழாவது வெடிப்பு ஆகும்.

நில அதிர்வு நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஐஸ்லாந்தின் வானிலை அலுவலகத்தின் கூற்றுப்படி, நேற்று மாலை வெடிக்க தொடங்கிய எரிமலை, இரவு 11:14 மணிக்கு 3 கிமீ (1.8 மைல்) நீளமுள்ள பிளவை உருவாக்கியது என்றும் ஆனால் இந்த வெடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் வெடித்ததை விட கணிசமாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எரிமலை வெடிப்பால் விமானப் போக்குவரத்துக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படுத்தவில்லை என்றாலும், அருகிலுள்ள கிரின்டாவிக் நகரம் உள்பட தீபகற்பத்தின் சில பகுதிகளில் எரிவாயு எச்சரிக்கை குறித்து அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.

தலைநகர் ரெய்க்ஜாவிக்கின் தென்மேற்கே 50 கிமீ (30 மைல்) தொலைவில் உள்ள 3,800 மக்கள் வசிக்கும் நகரமான கிரின்டாவிக் அருகே மீண்டும் மீண்டும் ஏற்படும் எரிமலை வெடிப்புகள் உள்கட்டமைப்பு மற்றும் உடைமைகளை சேதப்படுத்தியுள்ளன, மேலும் பல குடியிருப்பாளர்கள் தங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.


Next Story