உக்ரைனுக்கு மேலும் 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கும் அமெரிக்கா


உக்ரைனுக்கு மேலும் 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கும் அமெரிக்கா
x
தினத்தந்தி 12 Sep 2024 12:58 AM GMT (Updated: 12 Sep 2024 1:50 AM GMT)

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் சென்றுள்ளார்.

கீவ்,

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 925 நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என அதிபர் புதின் தெரிவித்தார். இதே கருத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார்.

இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமெரிக்கா, ரஷியாவுக்கு எதிராகப் போராடி வரும் உக்ரைன் அரசுக்கு அவ்வப்போது நிதியுதவி செய்துவருகிறது.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் சென்றுள்ளார். அவர் கீவ் நகரில் மந்திரிகள், அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் மின்சாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story