ஜோ பைடனை விட கமலா ஹாரிசை தோற்கடிப்பது எளிது: டொனால்டு டிரம்ப்


ஜோ பைடனை விட கமலா ஹாரிசை தோற்கடிப்பது எளிது: டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 18 Aug 2024 11:45 PM IST (Updated: 18 Aug 2024 11:56 PM IST)
t-max-icont-min-icon

கமலா ஹாரிஸ் குறித்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிசும் போட்டியிடுகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் இருவரும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு கமலா ஹாரிஸ் குறித்து டிரம்ப் கூறும் போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் எப்போதும் இந்திய பாரம்பரியத்தை உடையவர். தற்போது கருப்பினத்தவராக அறியப்பட விரும்புகிறார். இதனால் அவர் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா? என்பது எனக்கு தெரிய வில்லை என்று கூறி இருந்தார். டிரம்பின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

இந்த நிலையில் கமலா ஹாரிஸ் குறித்து டிரம்ப் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார் டொனால்டு டிரம்ப். பென்சில்வேனியாவில் நடந்த கூட்டத்தில் டிரம்ப் கூறியதாவது: நான் கமலா ஹாரிசை விட அழகாக இருக்கிறேன். நான் அவரை விட நல்ல தோற்றமுடையவன். ஜோபைடனை விட கமலா ஹாரிசை தோற்கடிப்பது எளிதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.


Next Story