உக்ரைனுக்கு ரூ.4 ஆயிரம் கோடி ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா


உக்ரைனுக்கு ரூ.4 ஆயிரம் கோடி ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா
x

கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா சமீபத்தில் அனுமதி வழங்கியது.

வாஷிங்டன்,

ரஷியா-உக்ரைன் போரில் அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகிறது. எனவே ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவியை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்குகிறது. மேலும் கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதனையடுத்து உக்ரைன் ஏவுகணையை பயன்படுத்தினால் பதிலடியாக அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.

இதனால் போர் மேலும் தீவிரம் அடைந்தது. எனவே உக்ரைனுக்கு மேலும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி ராணுவ உதவியை வழங்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. புதிய ஜனாதிபதியாக டிரம்ப் விரைவில் பொறுப்பேற்க உள்ள நிலையில் உக்ரைனுக்கு இந்த உதவியை ஜோ பைடன் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story