உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அடுத்த வாரம் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தகவல்
![உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அடுத்த வாரம் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தகவல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அடுத்த வாரம் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38264078-donald-trump.webp)
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அடுத்த வாரம் சந்திக்க இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அடுத்தவாரம் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற உடன், உக்ரைன் - ரஷியா போர் முடிவுக்கு வர ஆதரவாக பேசினார்.
இத்தகைய சூழலில் டிரம்ப் , ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளதாக கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனினும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இந்த சந்திப்பு நடைபெறுமா? நேரில் சந்திப்பாரா? என்ற விவரம் தெரியவில்லை. வெள்ளை மாளிகையில் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை வரவேற்ற டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் போது, இந்த பதிலை அளித்தார். அதேபோல, ரஷிய அதிபர் புதினையும் சந்திக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story